Connect with us
 

News

தளபதியின் பீஸ்ட் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர் !

Published

on

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.

இந்நிலையில் பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். இப்படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் மிக விரைவில் வெளியாகலாம்