News
கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் தமிழ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம் !

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கன்னட படம் கே.ஜி.எப். சாப்டர் 1. கன்னட சினிமா சரித்தரத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வசூலில் அதவிட பெரிய சாதனை படைத்தது. இப்படம் கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து அதே நாளில் உலகமெங்கும் வெளியானது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இதில் நாயகன் யஷ் உடன் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளனர். நடிகர் பிரகாஷ் இப்படத்தின் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாராம். யஷ் பிறந்த நாளான பிப்ரவரி மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி 200 மில்லியங்களுக்கு மே ரசிகர்கள் பார்த்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் தமிழக வெளியீட்டு உரிமையை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.