News
மூன்றவது முறையாக அஜித் 61 படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் !

அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை இப்படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கி வருகிறார். இதனையடுத்து அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் எச்.வினோத் இயக்க போனி கபூர் அவர்களே இப்படத்தையும் தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி அஜித்தின் 61-வது படத்தை விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் மாறன் மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் அதை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்கிறது என்றும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.