News
பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார் !

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 50 படங்களுக்கு மேலாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் கசான் கான். 1992 ஆம் ஆண்டு இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியான செந்தமிழ் பாட்டு படத்தின் மூலமக திரையுலகில் அறிமுகமானார் கசான் கான். கமல்ஹாசனின் கலைஞன், சரத்குமார் நடிப்பில் வேடன் என பல முன்னணி நடிகர்களில் படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் கசான் கான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.