Connect with us
 

News

இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் !

Published

on

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தை கடந்த ஒன்றரை வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது ஆனாலும் இன்னும் படம் முடிந்த பாடு இல்லை.

படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர் பார்க்கும் இடமெல்லாம் அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். அரசியல் கூட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து இடத்திலும் அப்டேட் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

இது போன்ற அனாகரீக செயலில் ஈடுபட வேண்டாம் என அஜித் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது இதனால் கொஞ்சம் அமைதியாக இருந்து வந்தனர் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் இந்தியா – நியூலாந்து டெஸ்ட் உலக சான்பியன்ஷிப் போட்டி நடக்கும் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டு மீண்டும் அலப்பறை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் அஜித் ரசிகர்கள் .

கொஞ்சம் அத அப்டேட் குடுங்க போனி கபூர் சார்.