Reviews

பைட் கிளப் – விமர்சனம் !

Published

on

Cast: Vijay Kumar, Kaarthekeyen Santhanam, Shankar Thas
Production: Reel Good Films
Director: Abbas A Rahmath
Screenplay: Abbas A Rahmath
Cinematography: Leon Britto
Editing: Kripakaran P
Music: Govind vasantha
Language: Tamil
Runtime: 2 Hours 18 Mins
Release Date: 15 December 2023

அறிமுக இயக்குநர் அப்பாஸ் எ ரகமத் இயக்கத்தில் உரியடி விஜயகுமார், மோனிஷா மோகன், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பைட் கிளப்.

கால்பந்து விளையாட்டு வீரராக வேணும் என்று சிறு வயதிலிருந்தே விஜயகுமாருக்கு ஆசை. அவரின் கோச் பெஞ்சமின். ஒரு காலத்தில் மிகப்பெரிய கால்பந்து வீரராக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட பெஞ்சமினுக்கு வடசென்னைக்காரன் என்ற அடையாளம் அவரை மேலே வளர விடாமல் முட்டுக்கட்டையாக நிற்க திறமை இருந்தும் வளராமல் போகிறார்.

இதில் மனம் உடைந்து போன பெஞ்சமின் தான் இழந்ததை தன் ஊர் இழக்கக்கூடாது என எண்ணி தன்னுடைய ஊருக்காக வட சென்னை ராஜன் போல வாழ்ந்து வருகிறார். ஆனால் பெஞ்சமின் தம்பி ஜோசப் கஞ்சா விற்கும் கிருபாவுடன் சேர்ந்து ஊருக்குள் கஞ்சா விற்று வருகிறார்.

இதை பல முறை பெஞ்சமின் கண்டித்தும் கேட்காத தம்பியை ஒரு நாள் அடித்து விடுகிறார் பெஞ்சமின். இதனால் கோபம் அடைந்த தம்பி அவனின் கூட்டாளியுடன் சேர்ந்து பெஞ்சமினை கொலை செய்து விடுகிறார். கொலை செய்த கூட்டாளி செய்யும் ஒரு சதியால் 10 வருடம் சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வருகிறான் பெஞ்சமின் தம்பி. சிறையிலிருந்து வந்ததும் தன்னை சிறை தண்டனை அனுபவிக்க விட்ட தன் கூட்டாளி கவுன்சிலர் பதிவியில் இருப்பதை அறிகிறார். கூட்டாளி கிருபாவை எப்படியும் பலி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதற்காக ஹீரோ விஜயகுமாருடன் பேசி பழகி கூட்டாளி சங்கருக்கு எதிராக சண்டையிட வைக்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

செல்வா கதாப்பாத்திரத்தில் வட சென்னை இளைஞனாக துடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.படத்தில் பேசி நடித்ததை விட ஓடி விரட்டி சண்டை போடுவதே அதிகமாக உள்ளது. முடிந்தவரை தன் கதாப்பாத்திரத்தை புதுமையாக காட்ட முயற்சித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக வரும் மோனிஷா மோகன் ஏன் வந்தார் இங்கு சென்றார் என்று தெரியாத அளவிற்கு அவரின் காட்சியமைப்பு.

வில்லனாக வரும் அவினாச் ரகுதேவன். நரி வேலை பார்த்து பலி வாங்க நினைக்கும் நரியாகவே திரையில் வருகிறார். அவரின் நண்பனாக வரும் லோக்கல் அரசியல் வாதி சங்கர் தாஸ். அப்படியே நிஜம் போல கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அவரின் மச்சானாக வரும் சரவணா வேல் சிறு வயதிலிருந்தே விஜயகுமாருடன் சண்டை போடும் எதிரியாக நன்றாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார்.

தான் என்ன சொல்ல வந்தேன் என்பதை திரைக்கதையில் சுவாரசியமாக சொல்ல முயற்சித்துள்ளார் பாராட்டுக்கள். சண்டை காட்சிகளும், படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்களிடம் இருந்த உண்மை தன்மை படத்தை நம்மை நெருக்கமாக கொண்டு சென்றது. கதையை நன்றாக சொல்லிவிட்டு திரைக்கதை கவனிக்காமல் விட்டுவிட்டார். தான் சொல்ல வந்த கதையை தெளிவில்லாமல் சொல்லியிருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா காட்சிகளை முடிந்த அளவு நம் மனதில் ஒட்ட வைக்க பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். கதையில் ஆழமில்லாத கானரத்தால் அவரது இசை நமக்கு ஒரு இரைச்சல் போலவே தெரிகிறது.

வடசென்னையில் இருக்ககூடிய பிரச்சனைகள் குறித்து பல படங்கள் இதே பாணியில் இதை விட சுவாரசியமாக வந்திருக்கிறது. இதனால் ஃபைட் கிளப். படத்தை நம்மால் பெரிதாக ரசிக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

Rating 3/5

 

Trending

Exit mobile version