News

மிரட்டலாக வெளியான விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

Published

on

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசன் நடிக்கும் 232-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் என்று பெயர் வைத்தது படக்குழு. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கம்ல் பிலிம்ஸ்ஸிப்படத்தை தயாரிக்கிறது.

கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.

இப்படத்தின் போட்டோ ஷூட் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அதன் படி இன்று சரியாக 5 மணிக்கு விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் அடங்கிய விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version