News

சந்தானம் நடிக்கும் குலு குலு ப்சத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !

Published

on

ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குலு குலு’. சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை அதுல்யா சந்திரா நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில்தான் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தது படக்குழு.

இவர்களுடன் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ச், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளர்னர்.

இப்படத்தின் டப்பிங் பணிகளை சந்தானம் தொடங்கியுள்ள நிலையில் நேற்று மாலை இப்படத்தின் பர்ஸ் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டரில் லாரியை கவிழ்த்து விட்டு ஜாலியாக வாயில் கேரட் சாப்பிட்டு கொண்டு சீட்டுக்கட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version