Connect with us
 

News

எனக்கு தளபதி விஜய் ஒரு சூப்பர் ஹீரோ – துல்கர் சல்மான் !

Published

on

மலையால நடிகர் துல்கர் சல்மான் தமிழில் வாய் மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் குரூப் என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் துல்கர் சல்மான் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்யின் நடனம் குறித்து அதை பார்த்து நான் வியந்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

நான் விஜய்யின் தீவிர ரசிகன் அதற்கு காரணம் அவரின் நடனம்தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறேன். முக்கியமாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாகவே கடர்ந்தது.

அத்தை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடியிருப்பார். அது அத்தனை எளிதானதல்ல என்னை பொருத்தவரை விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாகத்தான் எனக்கு தெரிகிறார். அவரது நடனத்திற்கு எப்போதுமே நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.