News

வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றிய நிறுவனம் !

Published

on

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். தற்போது வலிமை படத்தின் இறுதிக்கட்ட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கள் திருநாளில் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ளது.

அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை ஆனாலும் ஜனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது இப்படத்தின் வியாபாரத்தை தொடங்கியுள்ளது படக்குழு. முதலில் வலிமை படத்தின் வெளி நாட்டு விநியோக உரிமத்தை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் அஜித் படத்துக்கு இதுவரை இல்லாத அளவு தொகை கொடுத்து இந்த உரிமத்தை கைப்பற்றியுள்ளதாம்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா படத்தின் உரிமத்தையும் இதே நிறுவனம்தான் கைப்பைற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version