Reviews
கேங்கர்ஸ் – திரைவிமர்சனம் !
Cast: Sundar .C, Vadivelu, Catherine Therasa, Vani Bhojan,
Production: Avni Cinemax P Ltd, Benzz Media Pvt Ltd
Director: Sundar .C
Cinematography: E. Krishna Moorthy
Editing: Pravin Antony
Music: C . Sathya
Language: Tamil
Runtime: 2H 20Mins
Release Date: 24 April 2025
வடிவேலு, சுந்தர்.சி.கூட்டணியில் 14 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இன்று வெளியாகும் படம் கேங்கர்ஸ். இந்தப் படத்திற்கு முன்னர் 2010ல் நகரம் மறுபக்கம் படத்தில் தான் இவர்கள் இணைந்தனர். இந்தப் படத்தில் இவர்களது காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கதை களம்:
அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார். இதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்கள் சுஜிதா (கேதரின் டெரஸா) மற்றும் பி டி மாஸ்டர் சிங்காரம் (வடிவேலு). பின் புதிதாக வந்து சேர்கிறார் சரவணன் (சுந்தர் சி). உள்ளூர் அரசியல்வாதிகளான மைம் கோபி மற்றும் அருள்தாஸ் பள்ளியை தங்களது சாராய விற்பனை மற்றும் இன்னும் சில தவறான செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களை ஒவ்வொருத்தராக மறைந்திருந்து அட்டாக் செய்கிறார் சுந்தர் சி. ஒவ்வொரு முறை வில்லன்களை சுந்தர் சி அடித்துவிட்டு வர அந்த இடத்தில் வந்து மாட்டிக் கொள்கிறார் வடிவேலு. இப்படி தொடரும் கதை முதல் பாதியோடு டைவர்ஷன் எடுத்து இரண்டாம் பாதியில் புதிய ரூட்டில் செல்கிறது. முக்கிய வில்லனாக வரும் ஹரிஷ் பேரடி மறைத்து வைத்திருக்கும் 100 கோடியை கொள்ளையடிப்பதே கதையாக மாறுகிறது. அந்த 100 கோடியை கொள்ளையடிதார்கள் என்பது மீதி கதை?
படம் எப்படி இருக்கு
நடிகர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் பல வருடங்களுக்கு முன் பார்த்த வடிவேலுவை மீண்டும் திரையில் அதே காமெடி அரட்டைகளுடன் பார்த்ததில் திரையரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது கதையிலும் நன்றாகவே கவனம் செலுத்தியிருக்கிறார் சுந்தர் சி. வடிவேலு தான் படத்தின் ஆணிவேர் என்பதை நன்குணர்ந்து அவருக்கென்றே தனி ட்ராக் ஒன்றை ஏற்படுத்தி அதில் வடிவேலுவை பயணிக்க வைத்து வெற்றிகண்டிருக்கிறார் சுந்தர் சி. வயதானவர் வேடம், பெண் வேடம், போலீஸ் வேடம் என தான் ஏற்று நடித்த வேடத்திலும் சிரிக்க வைத்து ரசிகர்களை பூரிப்படைய வைத்திருக்கிறார்.
கதையின் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் காமெடிக்கென்று அதிக முக்கியத்துவம் கொடுத்து ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர் சுந்தர் சி.
ஒளிப்பதிவு நன்றாகவே கவனம் பெறுகிறது. படத்தின் இடைவேளை காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சி இரண்டிலும் பெரிதான் ட்விஸ்ட் இருப்பது படத்திற்கு பலம்.
சத்யாவின் இசையில் குப்பன் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் நன்றாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
மேலும், படத்தில் நடித்திருந்த கேத்ரின் தெரசா, மைம் கோபி, முனிஸ்காந்த், வானி போஜன், பக்ஸ், காளை, ஹரீஷ் பெராடி, அருள்தாஸ், சந்தான பாரதி, விச்சு, மாஸ்டர் பிரபாகர், மது சூதன் ராவ், ரிஷி, உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை அளவாக நடித்திருப்பார்கள்.
லாஜிக் பார்க்காமல் சுந்தர் சி’யின் மேஜிக்கை குடும்பத்தோடு கண்டுகளிக்க கண்டிப்பாக இந்த கேங்கர்ஸ்.
பிளஸ்
சுந்தர் சி கதை மற்றும் திரைக்கதை , வடிவேலு
மைனஸ்
இசை
கேங்கர்ஸ் – கலக்கல் பேங் நகைச்சுவை திரைப்படம்.
Rating :3.5/5