இயக்குநர் கெளம் ராமசந்திரன் இயக்கத்தில் பிளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் புட் புரொசக்சன் தயாரித்து சாய் பல்லவி நடிக்க சூர்யா மற்றும் ஜோதிகாவின் நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் Gargi இப்படத்தை வெளியிட்டது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அதில் ஒரு சிறுமி 4 வட மாநில இளைஞர்களால் கூட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். அதை காவல் துறையினர் விசாரணைக்கு வர அதில் 5-வது நமராக சாய் பல்லவியின் தந்தை கைது செய்யப்படுகிறார்.
தன் தந்தை குற்றவாளி அல்ல என உறுதியாக நம்பும் சாய் பல்லவி சட்ட ரீதியாக தந்தையை காப்பாற்ற போராடுகிறார். இறுதியில் சாய் பல்லவியின் தந்தை குற்றவாளியா இல்லையா அவரை சாய் பல்லவி காப்பாற்றினாரா அந்த 5-வது குற்றவாளி யார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக கார்கி என்ற பெயருடன் மிக மிக சிறப்பாக நடித்துள்ளார் சாய் பல்லவி. தான் ஒரு சிறந்த நடிகை என்பதை இப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்திருக்கிறார். தன் தந்தைக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருந்தும் அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற மகளின் பதபதப்பை படத்தின் ஒரு ஒரு காட்சியிலும் நமக்கு காட்டியுள்ளார் சாய் பல்லவி. இவரின் அந்த பத பதைப்பு நம்மை இருக்கை நுனியில் படம் முழுவதும் பார்க்க வைக்கிறது.
காளி வெங்கட் சாய் பல்லவியின் நடிப்பு இவரின் நடிப்பு படத்தின் பலம் வேறு எதுவும் இல்லை. காளி வெங்கட் அவர்களுக்கு கார்கி திரைப்படம் நிச்சயமாக மிக மிக முக்கியமான மைல் கல் திரைப்படம்.
ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், சரவணன் என அனைவரும் தங்களின் கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். நடிகை ஜஸ்வர்யா லஷ்சுமி பத்திரிக்கையாளராக சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் மலையாள ஸ்டைலில் தமிழ் பேசுவது உறுத்தல்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்தப்படம் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தக்கூடும். இப்படத்தின் தாக்கம் கண்டிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பேசும் படமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவு சமூக புரிதலுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன். குறிப்பாக நீதிபதி திருநங்கை என்பதால் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் அதற்கு அவர் கொடுக்கும் அந்த பதிலடிதான் மாஸ்.
ஒட்டு மொத்த ஆண்கள் மீது தவறான புரிதலை ஏற்படுத்துமோ என பெண்கள் நினைக்கும் நிலையில் அதற்கு காளி வெங்கட்டின் கதாப்பாத்திரம் மூலம் பதில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பாவாக நடிகர் சரவணன் சாய் பல்லவியிடம் பேசும் காட்சி உருக்கம். ஊடகங்கள் தங்களின் வருமானத்துக்காக விரைவுச் செய்தியாக ஒன்றை வெளியிடும் போது அது பாதிக்கப்பட்டவர்களை எந்த அளவுக்கு மன கசப்பையும் சிக்கலையும் உருவாக்குகிறது என்பதை அழுத்தமாக காட்டியிருக்கிறது.
கோவிந்த் வசந்தின் பின்னணி இசை உணர்வு பூர்வமாக உள்ளது. தரமான எழுத்து, இசை, ஒளிப்பதிவு அழுத்தமான உண்மையான இயக்கம் என தமிழ் சினிமாவில் அனைவரும் தவிர்க்க முடியாத சமூக கருத்துடன் கூடிய படத்தை சுவாரசியமாக கொடுத்த இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் அவரின் குழுவிற்கு பாராட்டு கட்டாயமாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.
சாய் பல்லவியின் கார்கி கதாப்பாத்திரத்தை நடுத்தர குடும்பத்து பெண்கள் அனைவரும் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள பல பெண்கள் தங்களுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்வார்கள் அந்த அளவுக்கு கார்கியின் கதாப்பாத்திர வடிவமைப்பு உள்ளது.
Gargi Movie Review By – Cinetimee
[wp-review id=”43176″]