News

சட்டம் ஒன்னும் உங்கள் சட்டை அல்ல விரும்பியபடி அணிய சூர்யாவுக்கு காயத்ரி பதிலடி !

Published

on

மத்திய அரசு ஒளிப்பதிவு வரைவு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக படங்கள் வெளிவந்த பின்னரும் அதன் மீதான புகார்கள் வந்தால் அந்த படம் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பும் அதிகாரத்தை பத்திய அரசுக்கு வழங்குவது. இதற்கு சினிமாவில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. திரையுலகின் பலர் இதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டதில் சட்டம் மக்களை காக்க வேண்டும் குரல்வளையை நெரிக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு டுவிட்டரில் பதில் கூறியுள்ளா நடிகையும் பா.ஜா.பிரமுகருமான காயத்ரி ரகுராம்:- சட்டம் என்பதி நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டையல்ல. கருத்து சுதந்திரம் நமக்கு தேவைதான். ஆனால் நம் தேசத்துக்கும் நமது கலாச்சாரத்துக்கும் எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமையியைக் குலைக்க அதை தவறாகப் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக நீங்கள் மோடிக்கு எதிராக செல்வது என்ற பெயரில் நீங்கள் இந்தியாவிற்கும் மக்களுக்கும் எதிராக செல்கிறீத்கள். எல்லாவற்றுக்கும் உங்கள் பொது வாழ்க்கை மற்றும் புகழுக்காக உங்கள் பேச்சில் நல்ல நடிப்பைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. பஞ்ச் வசனம் பேசுவதற்கு பதிலாக உண்மைகளை பேசுங்கள். இது திரைப்படத் துறையை எந்த வகையில் பாதிக்கிறது? விசில் மற்றும் கைதட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல. தேச பாதுகாப்பு முக்கியம். தேசபக்தி முக்கியமானது. உண்மை முக்கியமானது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதே போலா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிருந்தார் அதற்கும் பதில் கூறியிருந்தார் அதில்:- எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை. உங்கள் படங்களில் 4 சண்டைக்காட்சிகளும் 4 பாடல்களும் 4 செண்டிமென்ட் காட்சிகளும் 2 மாஸ் ஓப்படனிங் காட்சிகளும் ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள். வேறு எதும் இல்லை. இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? என்று பதிவுட்டுள்ளார்.

Trending

Exit mobile version