Connect with us
 

News

ரியல் ஹீரோ விஜய்தான் ஆதரவு குரல் கொடுத்த காயத்ரி ரகுராம் !

Published

on

நடிகையும் மற்றும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் சோசியல் மீடியாவில் பல அதிரடியான கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பாக இருந்து வருகிறார். அதன்படி சொகுசு கார் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நேற்று நீதிபதி கண்டனம் தெரிவித்து அபராதமும் விதித்து இருந்தார். இது குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

நடிகர் விஜய் உண்மையிலேயே ரியல் ஹீரோதான் அவர் பல ஏழைகளின் வாழ்க்கையில் இருக்கிறார். பிரதமர், முதல்வரின் கோரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்திருக்கிறார். பல மாணவர்களை படிக்க வைக்கிறார்.

ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவுகிறார். அதனால் இதையெல்லாம் மறந்து விட்டு நீதிமன்றத்தில் நடந்த ஒன்றை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்க கூடாது. அவர் செய்து வரும் நல்ல விசயங்களை மறக்கக் கூடாது என்று விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.