News

600க்கும் அதிகமான திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் கில்லி !

Published

on

இயக்குநர் தரணி இயக்கத்தில் கடந்த 2004ல் வெளியான திரைப்படம் கில்லி. தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றியையும் வசூலையும் பெற்றது.

இந்த நிலையில் கில்லி திரைப்படத்தை உலகம் முழுவதும் ரீ.ரிலீஸ் ஆகியுள்ளது. அதன் படி வெளிநாடுகளில் மட்டும் சுமார் 350க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது. புதிய படங்கள் மட்டும்தான் இந்த அளவு திரையரங்குகளில் வெளியாகும். ஆனால் ஒரு ரீ-ரிலீஸ் திரைப்படம் வெளியானது திரையுலகத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்தியுள்ளது. இதை தவிர இந்தியாவிலும் இப்படம் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறதாம்.

பல திரையரங்குகளில் முன்பதிவுகள் அரங்கம் நிறையும் அளவுக்கு ஆகியுள்ளதாம். வார விடுமுறை நாட்களிலும் குறிப்பிடத்தக்க முன்பதிவு நடந்துள்ளது. இதுவரை வெளியான ரீ-ரிலீஸ் படங்களில் இப்படம் புதிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version