News

காசு கொடுத்து என் படத்தை பாருங்கள் நான் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும் பெண் இயக்குநர் !

Published

on

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை ஏராளமான ஆவணப் படங்களை இயக்கியுள்ளார். செங்கடல் என்ற படத்தை தொடர்ந்து தற்போது மாடத்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நீ ஸ்ட்ரீம் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் இந்த திரைப்படம் படங்களை திருடி இலவசமாக வெளியிடும் தளங்களிலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் லீனா மணிமேகலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவுட்டுள்ளா பதிவில் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை கேட்டுள்ளார்.

பைரசியில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பல கோடிகளை கொட்டி படம் எடுக்கின்றோம். அப்படி கோடிகளை கொட்டி எடுக்கும் படங்களை பல கோடி கோடி கொடுத்து நிறுவனங்கள் அதை வாங்குகிறது.ஆனால் என் படமான மாடத்தி படத்தின் நிலவரம் வேறு ரசிகர்கள் நீங்கள் என் படத்தை நீ ஸ்ட்ரீம் தளத்தில் பணம் கொடுத்து பார்த்தால் மட்டுமே நான் அடுத்த மாதம் வீட்டு வாடகை கட்டமுடியும் என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version