Reviews
குட் பேட் அக்லி – திரைவிமர்சனம் !

Cast: Ajith Kumar, Trisha Krishnan, Usha Uthup, Rahul Dev, Kingsley, Roadies Raghu, Pradeep Kabra, Harry Josh, KGF Avinash, Yogi Babu, Prasanna, Prabhu, Priya Prakash, Simran, Tinnu Anand, Sayaji Shinde, Jackie Shroff, Sunil, Arjun Das.
Production: NAVEEN YERNENI – Y RAVI SHANKAR
Director: ADHIK RAVICHANDRAN
Screenplay: ADHIK RAVICHANDRAN
Cinematography: Abinandhan Ramanujam
Editing: Vijay Velukutty
Music: GV Prakash Kumar
Language: Tamil
Runtime: 2H 20Mins
Release Date: 10 April 2025
அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில், ஜாக்கி ஷெராஃப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இரட்டை வேடங்களில் நடித்து உருவாகியுள்ள படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் கதையை பொறுத்தவரையில், கேங்ஸ்டராக இருக்கும் அஜித் குமார், தனது மனைவி த்ரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலில் 18 ஆண்டுகள் இருக்கிறார். தனது மகனின் 18 வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என ஜெயிலரின் உதவியுடன் முறைப்படி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். இந்த சமயத்தில் ஸ்பெயினில் உள்ள மகனை யாரோ கடத்தி விடுகிறார்கள். அதன் பின்னர்தான், அஜித்தின் மகனை போதைப்பொருள் வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. அஜித்தின் முன் பகையாளர்கள் தான், தனது மகனை இப்படி சிக்க வைத்துள்ளார் என த்ரிஷா கூறுகிறார். ஆனாலும் இதற்கு காரணம் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன முன்பகை என்பதைக் கண்டுபிடித்து, ஜெயிலில் அடைக்கப்பட்ட தனது மகனை மீட்டாரா என்பதுதான் மீதிக்கதை
படம் எப்படி இருக்கு
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அஜித் குமார், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். ஆக்ஷன், உடல் மொழி, நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்த அஜீத். தான் நடித்த முந்தைய படங்களின் வசனங்களை பேசி ரசிகர்களை திருப்தி படுத்தி இருக்கிறார் நடிகர் அஜீத் குமார்
நாயகியாக நடித்து இருக்கும் திரிஷா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லத்தனத்தில் இரட்டிப்பாக மிரட்டி இருக்கிறார்
இந்த படத்தில் முழுக்க முழுக்க மாஸ் காட்சிகள் மட்டுமே குறிக்கோளாக வைத்து ஒட்டுமொத்த படத்தையும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதுவரை எந்த படத்திலும் பார்க்காத ஒரு அஜித்தை இந்த படத்தில் பார்க்கலாம். இதற்கு முன் வெளிவந்த படங்களிலெல்லாம் அஜித்திற்கு ஆங்காங்கே மாஸ் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சிகளில் திரையரங்கமே அதிரும்.
மேலும் படத்தில் பல இடங்களில் பிரபலமான பாடல்கள் ஒலித்து, ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறார்கள். திரைக்கதையில் எந்த இடத்தில் வேகம் குறையாமல், புல்லரிக்க வைக்கும் காட்சிகள் அநேகமாக கொடுத்து ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் தோன்றிய நடிகர், நடிகைகள் அனைவரும் சரியான தேர்வு தான். தங்களின் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து அக்கதாபாத்திரமாகவே மாறி கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக அஜித்தை தவிர படத்தின் மற்ற எந்த கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்படவில்லை. த்ரிஷா, பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷ்ரோஃப் மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ உள்ளிட்ட அனைவரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.சிறப்பு தோற்றதில் நடிகை சிம்ரன் சிறப்பான நடிப்பை வெளிபடுதியுள்ளார். பிரசன்னா இப்படத்தில் நடித்திருக்கிறார். பெரிதான ஸ்கோர் செய்ய படத்தில் இடம் கொடுக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும். சிறப்புத் தோற்றத்தில் வந்த சிம்ரன், அழகை அழகூட்டி காட்டியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில், பின்னணி இசையின் சத்தத்தை சற்றுக் குறைத்திருக்கலாம். மேலும் இருந்தாலும், இந்த படத்தில் தனக்கென்று ஒரு யூனிக் மியூசிக்கை கொடுக்கத் தவறியிருக்கிறார் ஜி வி பிரகாஷ்.
ஒளிபதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு அலப்பறை காட்டியுள்ளது. வெளிச்சத்தை நன்கு பயன்படுத்தி காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார்.
பிளஸ்
அஜீத் குமார் நடிப்பு. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திரைக்கதை. பாடல் ,கதை
மைனஸ்
பின்னணி இசையின் சத்தம்
மொத்தத்தில் – குட் பேட் அக்லி – விண்டேஜ் வோல்டேஜ் பிளாஸ்ட் படம்.
Rating 3/5