News
குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் விபரம் !

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தின் மிகப்பெரிய தோல்விக்குக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் இபப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே கூறவேண்டும். அதன் படி முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளியான அஜித் படங்களான விடாமுயற்சி மற்றும் துணிவு படங்களில் வசூலை விட அதிகமாகும்.
விடாமுயற்சி முதல் நாளில் மட்டும் ரூ.26 கோடியும், துணிவு ரூ.24.4 கோடியும் வசூலை பெற்றது இந்த சாதனைகளை தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் ரூ.30 கோடி வசூலித்து அந்த சாதனையை முடியடித்துள்ளது.