மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் Gulu Gulu திரைப்படம் எப்படி இருக்கு?
அமேசான் காடுகளில் பிறந்து, உலகமுழுக்க சுற்றிவந்து, 13 மொழிகளை கத்துக்கிட்டு வந்து இப்ப நம்ம ஊரில வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் கதையில் நாயகன், இது ஒருபுறமிருக்க தனது அப்பாவிற்கு ஒரு சின்ன வீடு இருக்கு, அந்த சின்ன வீட்டுக்கு ஒரு பொண்ணும் இருக்கு, எங்க நம்ம சொத்தில் பங்கு கேட்டு வந்து விடுமோ என்கிற பயத்தில் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிடும் இரு அண்ணன்கள்.
அந்த பெண்ணை கடத்தி கொலை செய்ய 4 இலங்கை தமிழர்களை வேலைக்கு வைக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு பதிலாக ஒரு விஞ்சானியின் மகனை கடத்தி செல்கிறார்கள்.
உதவி என்று யார் கேட்டாலும் எதையுமே எதிர்பார்க்காமல் செய்யக்கூடியவர் சந்தானம் அவரிடம் கடத்தப்பட்ட நபரின் நண்பர்கள் எங்கள் நண்பனை கடத்தி விட்டார்கள் மீட்டு கொடுக்கும்படி உதவி கேட்க அவர்களுடன் புறப்படுகிறார் சந்தானம்(கூகுள்). அந்த பையனை மீட்டார்களா இல்லையா இந்த பயணத்தில் இவர்கள் சந்தித்த பிரச்சனை என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சந்தானம் படம் என்றால் காமெடி படமாக மட்டுமே இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படியே நேர்மாறாக நடித்துள்ளார் அதுவும் ரசிக்கும் படியாக நடித்துள்ளார். அம்மா – அப்பாவை இழந்தது அழும் போதும் சரி தன் தாய்மொழியை பேச முடியவில்லை என்று நினைத்து அழும் போதும் சரி செண்டிமெண்ட் கலந்து நடித்துள்ளார்.
சந்தானத்துடன் வரும் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தின் பிரதீப் ராவத், சாய் தீனா, கவி, லொள்ளு சபா சேசு, மாறன், தீனா, என அனைவருமே தங்களின் கதாப்பாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளனர்.
ஒரு நபர் மீது இயழ்பாக வரும் நமக்கு வரும் ஈர்ப்பு என்பது வேறு காதல் என்பது வேறு என்பது ஒரு காட்சியில் மிகவும் அழகாவும் தெளிவாகவும் காட்டியுள்ளார் இயக்குநர் ரத்ன குமார். இப்படத்தில் வரும் பல வசனங்கள் ரசிக்கும் படியாக உள்ளது. அதிலும் சந்தானம் பேசும் பல வசனங்கள் அனைத்துமே சிறப்பு.
சந்தோஷ் நாராயணின் இசையும் சரி பின்னணி இசையும் சரி படத்திற்கு மிகப்பெரிய பலம் அதிலும் இடைவேளை காட்சியில் வரும் பின்னணி இசை வேற ரகம். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டுகிறது. தன் பாறுபட்ட வித்தியாசமான கோணங்களால் மிக அழகாக காட்டியுள்ளார். அதிலும் படத்தின் இறுதிக்காட்சியில் அந்த சாலையை காட்டிய விதம் அருமை.
முதல் பாதி நல்ல விறுவிறுப்புடன் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி சற்று தொய்வாக இருக்கிறது ஒரு கதையை காட்டாமல் அதற்குள் பல கதைகளை காட்டி ரசிகர்களை சற்று குழப்பம் அடையவும் வைத்து விட்டார் இயக்குநர் ரத்ன குமார். அதே போல படத்தின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம்.
சந்தானத்தின் கதாப்பாத்திரம் மூலம் வாழ்க்கையின் அர்த்தம் பெண் சுதந்திரம் உள்ளிடவற்றை பேச முயற்சித்திருக்கும் இயக்குநர் அதை அழுத்தமாக பதிவு செய்யவில்லை.
Gulu Gulu Review By Cine Timee
[wp-review id=”43363″]