Reviews
கட்ஸ் – திரைவிமர்சனம் !

Cast: Rangaraj, Nancy, Delhi Ganesh, Shruthi Narayanan, Sai Dheena, Birla Bose
Production: OPRP Productions
Director: Rangaraj
Screenplay: Rangaraj
Cinematography: Manoj
Editing: Ranjith
Music: Jose Franklin
Language: Tamil
Runtime:
Release Date: 13 June 2025
கதை ஆரம்பம் கிராமம் ஒன்றில் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டத்துக்கு ஒரு வடக்கத்தி முதலாளி திட்டமிட , அதை எதிர்க்கும் ஊர் நபரை (ரங்கராஜ்) அந்த முதலாளி அநியாயமாக கொலை செய்கிறான் .
கர்ப்பமாக இருக்கும் அவன் மனைவியும் (ஸ்ருதி நாராயணன்) குழந்தை பெற்றுக் கொடுத்து விட்டு செத்துப் போகிறார். தாய்மாமனால் வளர்க்கப்படும் அந்தக் குழந்தை படித்து சென்னையில் போலீசாகி , அடிக்கடி போகும் அனாதை இல்லத்துப் பெண்ணை (நான்சி) திருமணம் செய்து கொண்டு அங்கு இருந்தே ஓர் அனாதைக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க , மனைவி கர்ப்பமாகவும் ஆகும் சூழலில் , ஒரு திருநங்கை தாசில்தாரை சிலர் கொலை செய்ய, விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் போக, அதன் பின்னால் பெரிய கைகள் இருக்க, இன்ஸ்பெக்டர் குடும்பத்தையே தீர்த்துக் கட்ட அந்தப் பெரிய கை முயல, , அந்தப் பெரிய கைக்கும் இன்ஸ்பெக்டரின் அப்பாவைக் கொன்ற வடக்கத்தி முதலாளிக்கும் ஒரு இணைப்பு இருக்க , அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
படம் எப்படி இருக்கு
கதையின் நாயகி ஸ்ருதி நாராயணனும் தனது பங்களிப்பை மிகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார். மிகவும் எனர்ஜியாக தனது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்.மேலும் இக்கதையில் மற்றொரு நாயகியான நான்ஸி, மலையாள பேச்சில் நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். தனது கணவன் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் இடம் மிக சிறப்பாக இருக்கிறது.
மேலும் நாயகன் ரங்கராஜ் மொத்த படத்தையும் தனி ஒரு ஆளாக தனது தோளில் தாங்கிச் செல்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதையோடு கதாபாத்திரத்தை பயணிக்க வைத்துவிட்டார் நாயகன் ரங்கராஜ். நான்கு பரிணாமங்களில் தனது தோற்றத்தையும் உடலையும் ஏற்றி இறக்கி கடுமையான உழைப்பை இப்படத்திற்காக கொடுத்தது நல்லதொரு பலனை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம்.
இவர்களை தொடர்ந்து சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் சாய் தீனா.
மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் இன்னும் சற்று வழுவு சேர்த்திருக்கலாம்.
இப்படத்தின் இயக்குனர் காட்சிகள், தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே ஜம்ப் ஆகி சென்று கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், படத்தின் ஒன்லைன் ஸ்டோரிக்காகவே படத்தின் இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், தமிழ் பெண்களின் வீரத்தையும் பறைசாற்றிய ஒரு தரமான தமிழ் மண்ணின் படைப்பாக இப்படத்தைக் காணலாம்.
மேலும் படத்திற்கு இசை மற்றும் ஒளிப்பதிவும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
பிளஸ்
கதை நடிகர் மற்றும் நடிகை
மைனஸ்
திரைக்கதை ,வில்லன் , தேவையற்ற காட்சிகள் இசை மற்றும் ஒலிப்பதிவு
மொத்தத்தில்,
கட்ஸ் – கதையில் கவனம் தேவை.