Connect with us
 

News

ஹம்சவர்தனின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

Published

on

மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன் மணைவி சாந்தி இன்று காலமானார் இவருக்கு வயது 42.

கடந்த மாதம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பெற்று பரிசோதனையில் இவருக்கு நெகடிவ் என்ற வந்த பின்னரும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தேனாம்பேட்டையில் உள்ள இவரது வீட்டிற்கு சாந்தியின் உடலை கொண்டு வரவுள்ளனர். இவரின் உடலை நாளை மதியம் 2.30 மணிக்கு பெசன்ட் நகர் மின் பயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளனர்.

இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.