Connect with us
 

News

சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை !

Published

on

சென்னையில் திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் சனம் ஷெட்டி. திரைப்பட நடிகையான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்த நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம். சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார்.

இது குறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் தனக்கு வந்த ஆபாச குறுந்தகவல் அடங்கிய ஆதரங்களுடன் புகார் அளித்தார்.

அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தவர் நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைத்து வருகின்றனர்.