Connect with us
 

News

விஜய்சேதுபதி நடித்த கதாப்பாத்திரத்தில் ஹர்பஜன் சிங் !

Published

on

கடந்த 2012-ம் ஆண்டு இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தா காணோம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படம் தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட 6 மொழிகளில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கு ஹிட் படமானது.

இந்நிலையில் இப்படம் பஞ்சாபி மொழியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் விஜய்சேதுபதி நடித்த கதாப்பாத்திரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹர்பஜன் சிங் ஏற்கனவே தமிழில் உருவாகிவரும் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Continue Reading