News
மூன்றாவது முறையாக இணையும் ஹரி – விஷால் கூட்டணி !

தாமிரபரணி, பூஜை, படங்களை தொடர்ந்து விஷால் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்தை கார்த்தி சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச்ஃ பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். சுவாரசியமான கதைக்களம் மற்றும் பரபரப்பான திரைக்கதை கொண்ட இப்படத்தில் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
இதுகுறித்து மேலும் தகவல் படக்குழு விபரம் விரைவில் வெளியிடப்படும். நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படங்களை தவிர கார்த்திக் தங்கவேல், பாண்டியராஜ் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.