News
இந்தி சினிமாவில் ஒழுக்கம் மிக குறைவு – காஜல் அகர்வால் !

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம், என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு தற்போது இவர்களுக்கு ஒரு அழகான ஆண்குழந்தை உள்ளது.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதில் மிக பிஸியாக நடித்து வருகிறார். ஹிந்தி மொழியை தாய் மொழியாக இருந்தாலும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்ததன் மூலம் காஜல் அகர்வால் மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.
இது பற்றி அண்மையில் பேசிய காஜல் அகர்வால் “பலரும் பாலிவுட் படங்களில் நடிப்பதன் மூலம் நாடு முழுவதும் பிரபலம் கிடைக்கும் என நினைத்து அதில் நடிக்கின்றனர். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம் ஒழுக்கம் போன்றவை பாலிவுட்டில் குறைவுதான் என நான் கருதுகிறேன். அதனால்தான் நான் தென்னிந்திய சினிமாக்களில் நடித்தேன் என கூறியுள்ளார்.