Connect with us
 

News

மாஸ்டர் பட ஹிந்தி ரீமேக்கில் விஜய் வேடத்தில் கிரித்திக் ரோஷன் !

Published

on

தமிழில் வெளியான சில படங்களை இந்தியில் ரீமேக் செய்ய கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. ராகவா லாரல்ன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லஷ்மி படத்தில் அக்‌ஷய் குமார் நடித்தார்.

இப்படம் ஓடிடியில் வெளியானது இதே போல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா நடித்த மாநகரம் தர்போது இந்தியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பைகர் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் முனிஸ்கான் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

நயன்தாரா நடிப்பில் ரிலீசான கோலமாவு கோகிலா இந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரிமேக் செய்யப்படுகிறது. சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் ஆகிறது. அதே போல விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது.

இதில் விஜய் வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பார் என்று தெரிகிறது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா இந்தியில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ரீமேக் ஆகிறது. விஜய் சேதுபதி வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் மாதவனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர்.