News
ரசிகர்களுக்காக மட்டுமே நான் நடிகனாக இருக்கிறேன் – தனுஷ் !

நான் ஒரு நடிகராக இருப்பதை விட இயக்குநராக இருப்பதையே விரும்புகிறேன் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தனுஷ் பேசுகையில் ‘ எனக்கு நடிகராக இருப்பதை விட இயக்குநராக இருப்பதையே நான் விரும்புகிறேன். ரசிகர்கள் என் படங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் அதனால்தான் நான் நடிகராக இருக்கிறேன். இல்லையென்றால் நான் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர இயக்குநராக மாறியிருப்பேன் என்று கூறியுள்ளார்’
தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.