News
விஜய்யின் அடுத்த படத்தை நான் தான் இயக்குகிறேன் – வம்சி பைடிபல்லி !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இபப்டத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.
கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதாக செய்திகள் வெளியானது. தற்போது இவர்தான் இயக்கப்போகிறார் என்பதை உறுதி செய்துள்ளார். இது குறித்து அளித்த பேட்டியில் விஜய்யிடம் நான் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தில் ராஜ் தயாரிப்பில் இந்த படத்தை நான் தான் இயக்கவிருக்கிறேன் என்றும் இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்ததும் தயாரிப்பாளார் வெளியிடுவார் என்று கூறினார்.