News

என் உயிர்தான் விலை என்றால் அதையும் கொடுக்க தயார் – லீனா மணிமேகலை !

Published

on

செங்கடல், மாடத்தி, போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குநர் Leena Manimekalai. இவர் தற்போது இயக்கி வரும் டாக்குமென்ரி படம் காளி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதில் காளி வேடம் அணிந்த பெண் ஒரு கையில் சிகரெட் புகைப்பது போன்றும் ஒரு கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் புனிதமாக வழிபடும் தெய்வமான காளியை இழிவு படுத்தும் விதமாக உள்ளது என்று Leena Manimekalai மீது எதிர்ப்பு எழுந்தது. இவர் மீது வினி ஜிண்டால் என்ற வழக்கறிஞர் டில்லி போலிசில் புகாரும் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நெல்லை உள்ளிட்ட பல இடங்களிலும் லீனா மணிமேகலை மீது புகாரும் கண்டனங்களும் அதிகரித்து வருகிறது.

இந்த போஸ்டருக்கு கண்டம் தெரிவித்துள்ள குஷ்பு படைப்பாற்றலை சாதாரணமாக எடுக்குக் கொள்ளகூடாது. அதே படைப்பாளிகள் கடவுளை இப்படி சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இது கலவரத்தை தூண்டும் முயற்சி வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளா.

இதற்கு பதில் அளித்துள்ள Leena Manimekalai எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. உயிரோடு இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நான் நம்பும் அனைத்தையும் பேசும் குரலோடு இருக்கவே விரும்புகிறேன். அதற்கு என் உயிர்தான் விலை என்றால் அதையும் கொடுக்க நான் தயார் என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version