News
விஜய் சினிமாவை விட்டு விலகுவது எனக்கு வருத்தம் – நஸ்ரியா !

தளபதி விஜய் தன் சினிமா பயணத்தை 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயனகாக ஆரம்பித்தார். தற்போது வரை சுமார் 68 படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்ச நடிகராக உள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான தி கோட் இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்து உள்ளார். இன்னும் ஒரு படம் மட்டுமே நடித்து விட்டு சினிமாவிலிருந்து முழுமையாக விலகி விட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார்.
ஒரு படத்துக்கு சுமார் ரூ.200 கோடி சம்பளம் பெறும் தளபதி சினிமாவை விட்டு விலகுவது அனைவருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நடிகை நஸ்ரியா இது குறித்து கூறும் போது ‘நான் அஜித்தின் அவர்களின் தீவிர நடிகை. ஆனாலும் விஜய் நடிக்கும் 69-வது படம் அவரது கடைசி படம் என்று கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.