News
என் கணவர் படத்தை மட்டும் மோசமாக விமர்சிப்பது வருத்தமாக உள்ளது – ஜோதிகா !

நடிகை ஜோதிகா அண்மையில் நடித்து வெளியாகியுள்ள இந்தி வெப் தொடர் டப்பர் கார்டெல். இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த பேட்டியில் நடிகை ஜோதிகா சூர்யா நடிப்பில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்ற கங்குவா படத்தை பற்றி பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றாலும் படம் நன்றாக உள்ளது என்று ஜோதிகா அப்போது பாராட்டியிருந்தார்.
இது குறித்து ஜோதிகா பேசும் போது “ ஒரு சில படங்கள் நன்றாக இருப்பது இல்லை. வெற்றி பெற்ற சில பாடு மோசமான கமர்ஷியல் படங்களை நான் பார்த்தும் இருக்கிறேன். அந்த படங்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால் என் கணவர் நடிகர் சூர்யா படம் என்றால் மட்டும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. படம் முழுவதும் நன்றாக உள்ளது என்று நான் கூறவில்லை. படத்தில் சில குறைகள் இருக்கலாம் ஆனால் ஒரு படமும் நன்றாக இல்லை என்றால் எப்படி.
தென்னிந்திய சினிமாவில் எத்தனை எத்தனை படு மோசமான படங்களுக்கு எல்லாம் கொடுத்த விமர்சனத்தை விட இப்படத்திற்கு கொடூரமான விமர்சனங்களை கொடுத்தார்கள். அதை பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.