News
அப்பாவும் – அம்மாவும் பிரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – ஸ்ருதிஹாசன் !

உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகை சரிஹாவும் 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் பின்னர் 2004-ஆம் விவாகரத்தும் பெற்றனர். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே சினிமாவில் தற்போது நடித்து வருகிறார்கள்
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் கூறியதாவது:- இருவரும் இணைந்து வாழ முடியாது என்று அப்பாவும் – அம்மாவும் முடிவெடுத்து பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்தனர். அந்த வகையில் அவர்கள் வாழ நினைத்த வாழ்க்கைக்காக பிரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
அதே சமயம் எனக்கும் என் தங்கைக்கு நல்ல பெற்றோற்களாக அவர்கள் இருந்து வருகிறார்கள். சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவர்களால் சந்தோசமாக இருக்க முடியவில்லை. ஆனாலும் தற்போது இருவரும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஸ்ருதிஹாசன் தெரிவிதுள்ளார்.