Connect with us
 

News

ஜெய் பீம் படத்தை கொடுத்த உனக்கு தலை வணங்குகிறேன் சகோதரா – மாதவன் !

Published

on

இயக்குநர் ஞானசேகர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டை பெற்று வருகிறது.

பழங்குடி மக்களுக்கான நீதியை வலுயுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யா – ஜோதிகாவும் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

ரசிகர்களை தாண்டி இப்படம் அனைத்து அரசியல் மற்றும் நடிகர் நடிகைகளின் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தை பார்த்துள்ள நடிகர் மாதவன் சூர்யாவை பாராட்டியுள்ளார்.

மாதவன் கூறிய வாழ்த்துக்கள் :- சில படங்கள் மட்டுமே நம்மை சுற்றி நடக்கும் அநீதிகளை கண்டு நமக்கு கோபத்தை தூண்டும். ஜெய்பீம் திரைப்படம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். சகோதரர் சூர்யா அவர்களை நான் தலைவணங்குகிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க திரைப்படத்தை உருவாக்க ஒவ்வொரு துறைக்கும் மிக அற்புதமான முறையில் நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்துள்ளார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.