Connect with us
 

News

தி ஃபேமிலி மேன் வெப் தொடரை முற்றிலுமாக நான் புறக்கணிக்கிறேன் சேரன் டுவீட் !

Published

on

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி, பலர் நடித்த ‘தி ஃபேமிலிமேன் 2’ வெப் தொடர் அமேசான் பிரைமில் நேற்று நேற்று வெளியானது.

‘தி ஃபேமிலிமேன் 2’ வெப் தொடர் ஈழத்தமிழர்களை அவர்களின் உணர்வுகளை பெருமளவு புண்மடுத்தியுள்ளது. அதனால் இதை தடை செய்ய வேண்டுமேன சீமான் மற்றும் வைகோ உள்ளிட்ட பலர் மத்திய அரசை வலியுறுத்தினர். இதில் முக்கியமான வேடத்தில் நடித்த சமந்தாவுக்கு கடும் எதிர்ப்பு குவிந்தது.

இலங்கை தமிழகர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு காயப்படுத்தியுள்ளது. அதனால் இந்த வெப் தொடரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது.

முதலில் இதில் நடித்த சமந்தாவுக்கு பெரும் எதிர்ப்பு இருந்து வந்தாலும் இந்த வெப் தொடர் வெளியானதை தொடர்ந்து சமந்தாவுக்கு ஆதரவும் குவிந்து வருகிறது.

இந்த வெப் தொடர் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை நான் முற்றிலும் புறக்கணிக்கிறேன்.

இந்த தொடரை உடனே நிறுத்தவும், நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாராகா இருக்கவோ இணையவோ போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.