News

முழுக்க முழுக்க விஜய்க்காக உருவாக்கிய திரைப்படம் பீஸ்ட் – நெல்சன் திலீப்குமார் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் படம் நெல்சன் திலீப்குமார் கூறுகையில் முழுக்க முழுக்க தளபதியை மனதில் வைத்து மட்டுமே வீரராகவன் என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கினேன். இதுவரையில் நடித்துள்ள அனைத்து படங்களிலும் இருந்து பீஸ்ட் திரைப்படம் மாறுபட்ட படமாக இருக்கவேண்டும் என்று நினைத்து திரைக்கதையும் அமைத்தோம்.

பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்து விட்டு பலர் ஹாலிவுட் படம் போல இருக்கிறது என்று கூறினார்கள். கண்டிப்பாக இனி விஜய் அவர்களை இந்திய ஜேம்ஸ் என்று இப்படத்திற்கு பின்னர் அழைப்பார்கள் காரணம் அந்த அளவிற்கு இப்படத்தில் விஜய்க்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது.நிஜ வாழ்வில் விஜய் எப்படி இருப்பாரோ அப்படித்தான் இப்படத்திலும் 60 சதவீத ஆக்‌ஷன் 40 சதவீத காமெடி படத்தில் உள்ளது.

மக்கள் அதிகம் நடமாடும் ஷாப்பிங் மாலில் நடக்கும் கடத்தல் கதை என்பதால் விஜய் போன்ற டாப் ஹீரோக்களை அங்கு வைத்து படமாக்குவது மிகவும் கஷ்டம் என்பதால் ஷாப்பிங் மால் செட் ஒன்றை உருவாக்கினோம். படத்தில் பார்க்கும் போது உண்மையான ஒரு ஷாப்பிங் மால் போலவே இருக்கும் கண்டிப்பாக இப்படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக அமையும் என்று கூறினார் அதிலும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும் என்றார் நெல்சன் திலீப்குமார்.

Trending

Exit mobile version