News

அரியவன் திரைப்படத்தை நான் இயக்கவில்லை – மித்ரன் ஜவஹர் !

Published

on

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அரியவன் என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். மார்ச் 3-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அரியவன் படத்தை நான் இயக்கவில்லை என்றும் இப்படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மித்ரன் ஜவகர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியவன் திரைப்படத்தை எனது உதவியாளர்தான் இயக்கியுள்ளார். அவருக்கு நான் சில உதவிகள் செய்தேன் என்றும் அதை தவிர இந்த படத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று மித்ரன் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

ஈஷான் நாயகனாகவும் ப்ராணலி நாயகியாகவும் நடித்துள்ள அரியவன் திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version