News
ரைட்டர் படத்தின் ஹீரோ சமுத்திரக்கனி என்று எனக்கு தெரியாது – நடிகை இனியா !

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரைட்டர். நீலம் புரடஷன் சார்ப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதா நாயகியாக நடித்துள்ளார் நடிகை இனியா. இத்திரைப்படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று அதில் கலந்து கொண்டு பேசிய நடிக இனியா ரைட்டர் படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது மிகவும் சிறப்பாக சொன்னார். ஆனால் அதில் என் கதாபாத்திரம் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என்னிடம் கூறும் போது உங்களின் கதாப்பாத்திரம் சஸ்பென்ஸ் என்று மட்டும் சொன்னார். இப்படத்தில் நான் அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன்.
இதை தவிர ரைட்டர் படத்தில் சமுத்தக்கனி ஹீரோ என்று எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்க்கும் வரை ஏதோ முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி என்றுதான் நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில்தான் எனக்கு தெரியும் படத்தின் நாயகனே சமுத்திரக்கனிதான் என்று. தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முழு படத்தில் நடிக்க எனக்கு ஆசை என்றும் கூறினார்.