News

கிளாமராக நடிப்பேன் ஆடை குறைத்து நான் நடிப்பேன் என்று சொல்லவில்லை – கீர்த்தி சுரேஷ் !

Published

on

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த வாரம் சாணிக்காகிதம், சர்க்காரி வாரி பாட்டா படங்கள் வெளியானது. இப்படங்களை தொடர்ந்து தமிழில் மாமன்னன் தெலுங்கில் தசரா, போலா சங்கர், மலையாளத்தில் வாசி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் கிளாமராக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ள கீர்த்தி சுரேஷ் கிளாமர் வேடங்களில் நடிப்பதற்கு நான் ஒரு போதும் மறுத்ததில்லை. ஆனால் கிளாமர் என்று சொன்னதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டனர்.

கிளாமர் என்றால் அழகு அதை நாம் இன்று கவர்ச்சி என்று மிகைப்படுத்திவிட்டோம். உடம்பை காண்பிக்கும் ஆடைகளை நான் அணிய மாட்டேன். என்னை அழகாக காட்டும் ஆடைகளை கண்டிப்பாக நான் அணிவேன். முக்கியமாக ஆடையுடன் கூடிய கிளாமரை வெளிப்படுத்துவேன் என்பது மட்டும்தான் என்னுடைய கருத்தாக இருந்தது.

கிளாமர் வேடம் என்பதற்காக ஆடை குறைத்து நடிப்பேன் என்று ஒரு போதும் நான் கூறியதில்லை என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Trending

Exit mobile version