News
அபராதம் கட்ட எனக்கு விருப்பமில்லை தளபதியின் அதிரடி பதில் !

கடந்த 2012-ம் ஆண்டு லண்டலிருந்து இறன்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுவதில் இருந்து விலக்கு கேட்டு தளபதி விஜய் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சும்ரமணியம் மனுவை தள்ளுபடி செய்துவிஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தார்.
இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படி கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து தன் மீது வைக்கப்பட விமர்சனங்களை நீக்க கோரி விஜய் சென்னை ஜகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த நிலையில் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு மேல் முறையீடு நேற்று தனி நீதிமதி அமர்வு முன் மீண்டும் விசாரனைக்கு வந்தது. அதில் அபராத தொகையான 1 லட்சம் ரூபாயை ஏன் நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சும்ரமணியம் கேள்வி எழுப்பினார். அப்போது அபராத விஜய் தரப்பிலிருந்து அந்த 1 லட்ச தொகையை முதல்வன் நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு தெரிவித்தது.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் ஏற்கனவே கொடுத்து விட்டதகவும் விஜய் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளாது.