News
தேள் படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை – பிரபு தேவா !

இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள்.
தனஞ்செயன் சாருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் டப்பிங் பணி மிக சுவாரஸ்யமானதாக அமைந்தது. முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார். அவர் இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார்.
அவரும் நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஒரு தயாரிப்பாளராக K.E. ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டு வரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம்.
இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர்.
நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளுல் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.