News

திரையரங்கில் கலகலப்பாக படம் பார்க்கும் சுகம் தனி – அம்ரிதா ஐயர் !

Published

on

பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் நடிகை அம்ரிதா ஆனால் அதன் பின்னர் எந்த படத்திலும் தென்படவே இல்லை என்று கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.

பிகில் திரைப்படம் முடிந்த பின்னர் தெலுங்கில் சில பட வாய்ப்புகள் வந்தன. அந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு இப்போ இங்கு வந்தேன் நான் வந்த போது ஊரடங்கு. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு இல்லை.

எனக்கும் நான் நடிக்கும் கதாப்பாத்திரத்துக்கும் முக்கியம் இருக்கும் வேடத்தில் மட்டுமே நான் நடிப்பேன். அப்படி தேர்வு செய்து நான் நடித்த திரைப்படம்தான் வணக்கம்டா மாம்ள. அதை தொடர்ந்து லிஃப்ட் படத்தில் நடித்தேன்.

தெலுங்கில் அர்ஜூனா பல்குனா என்ற ஒரு படத்திலும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்துள்ளேன். லிஃப்ட் திரைப்படம் முழுக்க முழுக்க திகில் கலந்த த்ரில்லர் கதைக்களம். நான் இது வரை நடிக்காத கதாப்பாத்திரம் இப்படத்தில். இப்படத்தில் நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறேன். உண்மையிலேயே நான் சினிமாவிற்க்கு வருவதற்கு முன்னதாக கம்பெனியில்தான் வேலை பார்தேன். சென்னையில் இருந்து என் நெருங்கிய தோழி பாடலிங் விளம்பரப்படங்கள் ஆல்பம் போன்றவற்றில் என்னை அறிமுகம் செய்தார். அதன் பின்னர் லிங்கா, தெறி, போன்ற படங்களில் தோழி வேடங்களில் நடித்தேன். நிறைய விளம்பர படங்களுக்கு பின்னரே கதா நாயகி வேடம் கிடைத்தது.

ஓடிடி தளத்தின் வளர்ச்சி பற்றி கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அம்ரிதா இது போன்ற ஊரடங்கு காலகட்டங்களில் மக்களின் பாதுகாப்புத்தான் முக்கியம். அதுவும் இந்த சூழலுக்கு ஓடிடி வரவேற்க வேண்டிய ஒன்றுதான். இந்த கொரோனா முடிவுக்கு வந்த பின்னர் தியேட்டரில் படம் பார்ப்பதுதான் நல்லது. கலகலப்பாக படம் பார்க்கும் அந்த சுகமே தனி என்று கூறினார்.

Trending

Exit mobile version