News

நான் எப்போதும் ஹீரோதான்: கே.பாக்யராஜ் பேச்சு !

Published

on

பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக வெளியான இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பாக்கியராஜ் பேசியதாவது :-
21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன் நான் எப்போதும் ஹீரோ தான். இங்கு இயக்குநர் என்னை படைத்த அப்பா அம்மாவுக்கு என ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. நான் இதுவரை கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள் இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தாரகள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது .ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்தில் நான் மறந்து விடுவேன் என பாண்டி எனக்கு டயலாக் சொல்லி அசத்தினார். அனைவரும் சிறப்பாக நடித்து படத்தை எடுத்து விட்டார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

விழாவில் நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமனண் உட்பட பலர் பேசினர்.

Trending

Exit mobile version