News
20 ஆண்டுகளில் இப்படி ஒரு கதையைக் நான் கேட்கவில்லை – விஜய் !

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் இந்த படத்தைப் பற்றி பேசியுள்ளார்.
அதில் ‘இந்த படத்தின் கதையை சொன்னபோது கடந்த 20 வருடங்களில் நான் கேட்ட மிகச்சிறந்த கதை என்று விஜய் பாராட்டினார். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியாகும்’ எனக் கூறியுள்ளார்.
ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.