News
எங்கேயோ பார்த்திருக்கிறேன் இணையத்தை கலக்கும் தனுஷ் பதிவு !

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று குறிப்பிட்டுள்ளார்.நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது மகன்களுக்காக தனுஷ் மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்வார் என்றும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.