News

நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும் – யாஷிகா ஆனந்தின் உருக்கமான பதிவு !

Published

on

நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களின் நண்பர்களுடன் கடந்த 24-ம் தேதி காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகேவுள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாஷிகா படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது சற்று இயழ்பு நிலைக்கு திரும்பியுள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா பதிவிட்டுள்ள பதிவில்.

ஒவ்வொரு நொடியும் நான் பவணியை மிஸ் செய்வேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்பது தெரியும். என்னை மன்னித்துவிடு. உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன். ஆனால், உன்னை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வேன். வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன்.

உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்பி விடுவாய் என்று தான் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றும் உன்னுடைய நினைவுகளை நினைத்து பூரிப்படைகிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப்பெரிய விபத்திலிருந்து இப்படி காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா, இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை பழிப்பதா என்பது தெரியவில்லை.

Trending

Exit mobile version