News

மிஸ்டர் லோக்கல் படத்தால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் – ஞானவேல் ராஜா !

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019-ம் தேதி இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்ப்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தின் சம்பள பாக்கியை தராமல் இருப்பதாக கூறி ஞானவேல்ராஜா மீது வழக்குப்பதிவு செய்தார் சிவகார்த்திகேயன்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராத்ததுடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜகோர்ட்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால்தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும் மிஸ்டர் லோக்கல் படத்தால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version