Connect with us
 

News

ராதா ஷ்யாம் படத்தை 2 மாதத்துக்கு முன்னரே நான் பார்த்து விட்டேன் – உதயநிதி !

Published

on

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர்/நடிகர் உதயநிதி பேசியதாவது:-

ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்ண எப் ஐ ஆர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை, என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன் அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது, படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது. பிரபாஸ் உடைய ஃபேன் நான், பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும். பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார், இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம்.

நடிகர் பிரபாஸ் பேசியதாவது:-

சத்யராஜ் என் செல்ல கட்டப்பா, அவருடன் மிர்ச்சி படம் முதல் முறையாக பண்ணினேன் அது சூப்பர் டூப்பர் ஹிட், அதன் பிறகு பாகுபலி, இப்பொது இந்த படத்தில் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது. காதல் கதைக்கு மியூசிக் முக்கியம் ஜஸ்டின் அற்புதமான இசையை தந்துள்ளார். இந்த படத்தின் நாயகன் மனோஜ் சார் தான் என்னை அத்தனை அழகாக காட்டியுள்ளார். எல்லோரும் விஷுவலை பாராட்டுகிறார்கள் அவர்களுக்கு நன்றி. எல்லாம் மனோஜ் சாருக்கு தான். இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார் கெமிஸ்ட் ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பிரமோத் என்னை வச்சு லவ் ஸ்டோரி எடுத்திருக்கிறார் நிறைய தைரியம் இருக்கனும், இயக்குநர் பாகுபலிக்கு முன்பே இந்த கதையை சொன்னார். எப்படி என்னை காதல் கதையில் யோசித்தார் என தெரியவில்லை. 5 வருடம் நீண்ட பயணம் ராதே ஷ்யாம் மிக நல்ல படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி

1970 களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார், அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருக்கிறார், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மார்ச் 11, 2022 அன்று திரைக்கு வரவுள்ள பன்மொழிப் படமான ராதே ஷ்யாமை, ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

நடிகை பூஜா ஹெக்டே பேசியதாவது:-

நாங்கள் கடந்த 5 வருடங்களாக உழைத்த உழைப்பு உங்களுக்காக உருவாக்கிய காதல் கதை உங்களிடம் வந்துள்ளது. இந்த கடின காலத்தை தாண்டி, இந்த படத்தை எடுத்து வந்துள்ளோம், பிரமோத் மிக பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறார், ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம், பிரபாஸ் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தந்தார், மனோஜ் உடன் பீஸ்ட் படமும் செய்கிறேன். இந்தப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார்.