News

எனக்கு கிடைத்த படவாய்ப்புகளும் கடவுள் கொடுத்த வரமாகவே பார்க்கிறேன் – மீனாட்சி சவுத்ரி !

Published

on

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் தற்போது விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “ எனக்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் வருகின்றது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் ஜோடியாக நடித்துள்ள “தி கோட்” படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படம் செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.

துல்கர் சல்மான் ஜோடியாக நடித்துள்ள லக்கி பாஸ்கர் படமும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. தெலுங்கில் வெங்கடேஷ்க்கு ஜோடியாகவும், வருண் தேஜ் ஜோடியாக “மட்கா “ என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

எனக்கு கிடைக்கும் இந்த பட வாய்ப்புகளும் கடவுள் எனக்கு கொடுத்த வரமாகவே நான் நினைக்கிறேன். தற்போது நான் நடிக்கும் அனைத்து படங்களுமே பான் இந்தியா படம். இதை எல்லாம் நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே போல இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கிறது. இளம் நடிகர்களுக்கும் மூத்த நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது என்று பெருமையாகவும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் கூறினார்.

 

Trending

Exit mobile version