Connect with us
 

News

விஜய்யிடம் கற்றுக்கொண்டதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன் – பிரியங்கா சோப்ரா !

Published

on

விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் நடிகையாகவும் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் ஹிந்தி படங்களில் நடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாகவும் உள்ளார். இதை தவிர ஹாலிவுட் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் தமிழன் என்ற தமிழ் படம் ஹிந்தியில் அண்டாஸ் மற்றும் தி ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.

முதல் முறையாக நான் படப்பிடிப்புக்கு சென்றபோது உடை உடுத்துவதும் மேக்கப் போடுவதும் நடிப்பு என்றுதான் நினைத்திருந்தேன். தமிழன் படத்தில் நடித்தபோது எனக்கு தமிழ் தெரியாததால் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. யாரவது வசனங்களை சொல்ல சொல்ல நான் படப்பாடம் செய்து கொண்டுதான் பேசுவேன் அப்போது என்னுடைய சக நடிகரான விஜய் நடிப்பதை பார்ப்பேன்.

விஜய் என் திரையுலக வாழ்க்கையின் துவக்க காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னடக்கத்துடன் இருப்பார். ஒருமுறை படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டால் திரும்பி செல்ல மாட்டார்.

அதனை நான் இன்று வரை கடைப்பிடிக்கிறேன். நான் எப்போழுதாவது தான் காட்சிகள் படமாகும் இடைவேளையில் எனக்கு அறைக்கு செல்வேன் மற்றபடி எப்போழுதுமே படப்பிடிப்பு தளத்தில்தான் இருப்பேன் என்று கூறினார்.