News
வேம்புலி கதாபாத்திரத்தை அஜித் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் !
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்து அமேஷான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வெளியான நாள் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் நடக்கும் படத்தை மிக சரியாகவும் நேர்மையாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
இப்படத்தில் யாராலும் தோற்கடிக்க முடியாத குத்துச்சண்டை வீரராக ஜான் கொக்கேன் என்பவர் நடிந்திருந்தார். மும்பையை சேர்ந்த இவர் பாகுபலி முதல் பாகம், வீரம், ஆகிய படங்களில் நடித்துள்ளார். சார்பட்ட பரம்பரை படத்தில் வேம்புலி என்ற கதாப்பாத்திரத்தில் இவரின் நடிப்பு அதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பாராட்டில் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்த பாராடுக்கு அவர் தல அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இது பற்றி இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளா பதிவில் கூறியுள்ளதாவது:-
என்னை நானே நம்புவதற்கு தல அஜித் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பார். வீரம் படத்தின் போது உங்களுடன் செலவிட்ட நேரம் மற்றும் நாட்கள் என் வாழ்வில் ஒரு பாடமாக அமைந்தது. ஒரு ஒரு நாளும் நான் கடுமையாக உழைக்கவும் சிறந்த மனிதனாக இருப்பதற்கும் நீங்க ஒரு ஊண்டுகோளாக இருந்தீர்கள். வேம்புலி கதாப்பாத்திரத்தை உங்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன் சார். ஐ லவ் யூ சார் என்று கூறியுள்ளார்.